அமெரிக்கா எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அது சீனாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது என்று கூறியுள்ளார் முன்னாள் World Bank தலைவரும், அமெரிக்காவின் வர்த்தக பேச்சுகளுக்கான முன்னாள் பிரதிநிதியுமான Robert Zoellick.
.
சீனா தொழில்நுட்பத்தில் வேகமாக வளர்வதை தடுக்க அமெரிக்கா பல முனைகளிலும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அத்துடன் ஐரோப்பிய மற்றும் நடப்பு நாடுகளை சீனாவின் 5G நவீன தொழில்நுட்பங்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுள்ளது அமெரிக்கா.
.
அத்துடன் அமெரிக்காவின் வர்த்தக பேச்சுகளுக்கான தற்போதை பிரதிநிதி Lighthizer தான் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தகத்தை முறிக்க முடியும் என்று கூறிய கருத்தையும் மறுத்துள்ளார் Zoellick.
.
Zoellick மேலும் கருத்து தெரிவிக்கையில், அமெரிக்கா சீனாவுடன் வர்த்தக யுத்தம் செய்வது அமெரிக்காவுக்கே அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், பதிலாக அமெரிக்கா சீனாவுடனான இணைந்த வர்த்தக கொள்கைகள் மூலமே அமெரிக்காவை வளப்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளார்.
.
சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் 50% முதல் 60% மானவை அமெரிக்காவில் வேறு பொருட்களை தயாரிக்க பயன்படுத்தப்படுவதாகவும், ரம்பின் புதிய இறக்குமதி வரி அந்த பொருட்களின் விலைகளையும் அதிகரித்து உள்ளதாகவும் Zoellick கூறியுள்ளார்.
.