உலகம் எங்கும் பொதுவாக இரண்டு வகை OS (Operating System) கொண்ட கணனிகள் உண்டு. அதில் சுமார் 85% கணனிகள் பயன்படுத்துவது அமெரிக்க Microsoft நிறுவனத்தின் Windows என்ற OS. அடுத்து, சுமார் 15% கணனிகள் பயன்படுத்துவது அமெரிக்க Apple நிறுவனத்தின் iOS. ஆனால் வேறு சில OS களும் உண்டு. அதில் Linux வகை OS தரமான ஒன்று.
அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள Windows மற்றும் Apple கணனிகளில் இருந்து தன்னை விடுவிக்க சீனா Kylin என்ற Linux வகை கணனிகளை மேலும் ஊக்குவிக்க உள்ளது.
தற்போது சீன இராணுவமும், பிரதான அரச திணைக்களங்களும் Kylin கணனிகளையே பயன்படுத்துகின்றன. அமெரிக்காவின் உளவுகளில் இருந்து தன்னை பாதுகாக்கவே சீனா அமெரிக்க OS களை தவிர்க்கிறது.
2001ம் ஆண்டு முதலில் வெளிவந்த Lylin OS அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இல்லை. 2001ம் ஆண்டில் இந்த OS FreeBSD kernel நுட்பத்தை கொண்டிருந்தது. பின் 2020ம் ஆண்டில் இது Linux kernel நுட்பத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
2017ம் ஆண்டு சீனாவின் அழுத்தத்தால் Microsoft நிறுவனமும் China Electronics Technology Group நிறுவனமும் இணைந்து Windows 10 China Government Edition என்ற சீனாவுக்கு மட்டுமான OS ஐ தயாரித்து இருந்தன.
உலக அளவில் Kylin OS ஒரு வெற்றிகரமான OS ஆக வளர்வது மிக கடினம் என்றாலும், சீனாவில் அதை அரசு இலகுவில் வளர்க்கலாம்.