இந்திய பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவில் இயங்கும் Disinfo Lab என்ற செய்திகளை ஆய்வு செய்யும் அமைப்பு உண்மையில் பா.ஜ. கட்சிக்கு அல்லது பிரதமர் மோதிக்கு பாதகமான செய்திகளை, கருத்துக்களை வெளியிடுவோரை பொய்யர்கள் என்று பரப்புரை செய்வதையே ஒரே நோக்கமாக கொண்டது என்று கூறுகிறது அமெரிக்காவின் The Washington Post செய்தி நிறுவனம்.
Disinfo Lab வெளியிடும் ஆதாரம் அற்ற கருத்துக்களை பல பா.ஜ. அரசியல்வாதிகள், ஆதரவாளர் மீண்டும், மீண்டும் Retweet செய்து அந்த ஆதாரம் அற்ற செய்திகளை வேகமாக பரவ செய்கின்றனர் என்கிறது Washington Post.
Disinfo Lab பின் Twitter பதிவுகளை retweet செய்த 250 முன்னிலை ஆதரவாளரை Post ஆராய்ந்தபோது அதில் 35 பேர் பா.ஜ. அதிகாரிகள் என்றும், 14 பேர் அரச அல்லது இராணுவ அதிகாரிகள் என்றும், 61 பேர் பத்திரிகையாளர் என்றும், 140 பேர் பரப்புரை செய்வோர் என்றும் அறிந்துள்ளது.
இந்தியாவின் ரஷ்யாவுடனான உறவையும், இஸ்ரேலுடனான புதிய உறவையும் Disinfo Lab மகிமைப்படுத்தி செய்திகளை வெளியிடுகிறது என்றும் கூறப்படுகிறது.
Disinfo Lab 2020ம் ஆண்டு லெப். கேணல். Dibya Satpathy, வயது 39, என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது என்கிறது Washington Post. இவர் இந்திய புலனாய்வில் பணியாற்றியவர்.
Disinfo Lab பா.ஜவுக்கு ஆதரவு வழங்காதோரை இஸ்லாமியர் என்றும், பாகிஸ்தான் உளவு படையின் ஆதரவாளர் என்றும் திரித்து கூறுகிறது.
George Soros என்ற அமெரிக்க billionaire பிரதமர் மோதி ஒரு சனநாயகவாதி அல்ல என்று கூறியிருந்தனர். பின்னர் Sunita Viswanath என்பவர் பா.ஜவின் இந்து வாத கொள்கையை சாட உடனே அவரை Soros சின் கையாள் என்று கூறியது Disinfo Lab.
https://www.washingtonpost.com/world/2023/12/10/india-the-disinfo-lab-discredit-critics/