பல சந்ததிகளாக உலகம் எங்கும் அமெரிக்க சார்பு பரப்புரைகளை ஒலி/ஒளி பரப்பி வந்த அமெரிக்காவின் Voice of America (VoA) பரப்புரை சேவையை முற்றாக நிறுத்திவிட அமெரிக்க சனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
VoA தனக்கும், வலதுசாரிகளுக்கும் எதிரான கொள்கைகளை கொண்டுள்ளது என்று ரம்ப் குறைகூறி உள்ளார்.
Mike Abramowitz என்ற VoA சேவையின் Director தன்னையும், VoA அமைப்பின் 1,300 ஊழியர்களையும் சம்பளத்துடனான கட்டாய விடுப்பில் அரசு வைத்துள்ளதாக கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் சோவியத்/ரஷ்யா, சீனா, இந்தியா, ஈரான் போன்ற நாட்டு மக்களுக்கு அமெரிக்க சார்பு பரப்புரைகளை VoAபரப்பி இருந்தது. அண்மையில் இது 48 மொழிகளில் பரப்புரைகளை செய்தது.
இலங்கையில் யுத்தம் ஆரம்பிக்கவும் இலங்கையில் இருந்த VoA வும் ஒரு பிரதான காரணம். இலங்கையில் இருந்த VoA இந்திய மொழிகளில் இந்திய மக்களுக்கு பிரச்சாரம் செய்வதை சோவியத் பக்கம் இருந்த இந்திரா காந்தி கடுமையாக எதிர்த்திருந்தார்.
ஹிட்டலரினதும், ஜப்பானினதும் பரப்புரைகளை தடுக்கும் நோக்கில் 1942ம் ஆண்டு VoA ஆரம்பிக்கப்பட்டு இருந்தது. அக்காலத்தில் VoA சேவை BBC கோபுரங்கள் மூலமே அதிகம் பரப்பப்பட்டது.
VoA பரப்புரைகள் அமெரிக்க மக்களுக்கு ஒலிஒளி பரப்பு செய்யப்படக்கூடாது என்றும் ஒரு சட்டம் உள்ளது. அதாவது VoA வின் பரப்புரைகள் உலகுக்கு மட்டுமே.