காசா பலஸ்தீனருக்கு ஆதரவு தெரிவித்தும், உடனடி யுத்த நிறுத்தத்தை கேட்டும் Los Angeles நகரில் உள்ள University of California (UCLA) வளாகத்தில் அமைதியாக போராட்டம் செய்த தரப்பு மீது அங்கு திடீரென நுழைந்த முகமூடி அணிந்த இஸ்ரேல் ஆதரவு குழு ஒன்று வன்முறையில் ஈடுபட்டுள்ளது.
தடிகளுடன் வந்து தாக்கிய இஸ்ரேல் ஆதரவு குழு பெட்ரோல் குண்டு ஒன்றையும் வீசி உள்ளது.
இந்த வன்முறையை அந்த பல்கலைக்கழகத்தை vice-chancellor Mary Osako “horrific of violence occurred at the encampment tonight” என்று விபரித்துள்ளார்.
இந்த வன்முறையை காரணம் காட்டி பல்கலைக்கழகம் போலீசாரை உதவிக்கு அழைத்துள்ளது.
இதற்கு முன் நியூ யார்க் நகரில் உள்ள Columbia University வளாகத்தில் இருந்த பலஸ்தீனர் ஆதரவு ஆர்ப்பாட்ட குழு போலீசாரால் கைது செய்யப்பட்டு இருந்தனர். இங்கே சுமார் 200 மாணவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை 25 அமெரிக்க பல்கலைக்கழகங்களில் 1,000 காசா ஆதரவு மாணவர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
Hamilton Hall என்ற கொலம்பியா பல்கலைக்கழகத்து மண்டபத்தில் இருந்த காசா ஆதரவு குழுவை கைது செய்ய போலீசார் இரண்டாம் மாடி யன்னல்களை உடைந்து உள்ளே சென்றுள்ளனர்.