மத்திய கிழக்கு நாடான UAE அதன் அபுதாபி துறைமுகத்திற்கு அருகில் சீனா தளம் ஒன்றை மிக அமைக்க அனுமதி வழங்கி உள்ளதா என்று சந்தேகம் கொண்டுள்ளது அமெரிக்கா.
The Washington Post செய்தி நிறுவனம் அறிந்த அமெரிக்காவின் top-secret அறிக்கை ஒன்றிலேயே இந்த சந்தேகம் குறிப்பிடப்பட்டு உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் அபுதாபியில் உள்ள Khalifa துறை அருகே சீனா வேகமாக கட்டுமானங்கள் செய்வதை அமெரிக்கா அறிந்துள்ளது.
Khalifa Port சீனாவின் COSCO நிறுவனமும் UAE யின் Abu Dhabi Ports Group நிறுவனமும் இயக்கும் துறைமுகம்.
இந்த செய்தி உண்மையானால், அமெரிக்காவின் தளத்தை பல ஆண்டுகளாக கொண்டுள்ள UAE தற்போது சீனா பக்கம் சாய்ந்தமை அறியப்படும்.
Project 141 திட்டத்தில், 2030ம் ஆண்டளவில், சீனா குறைந்தது 5 நாடுகளில் படை தளங்களையும், 10 logistical support தளங்களையும் கொண்டிருக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது சீனா ஒரு தளத்தை Djibouti என்ற நாட்டில் கொண்டுள்ளது.