கனடாவின் Toronto நகரில் உள்ள பழம் பெரும் University of Toronto உட்பட மொத்தம் 7 கனடிய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் காசா ஆதரவு முகாம்களை ஆரம்பித்து உள்ளனர். University of Toronto மாணவர் முகாம் (encampment) இன்று வியாழன் காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை U of T அதிகாரிகள் வளாகத்தில் முகாம் இடுவது சட்டத்திற்கு முரணானது என்று கூறி மாணவர் அனைவருக்கும் ஈமெயில் ஒன்று அனுப்பி இருந்தாலும் மாணவர் இன்று வியாழன் முகாமிட்டுள்ளனர்.
U of T மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து சில விரிவுரையாளர் ஒப்பமிட்ட அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் U of T chapters of the Jewish Faculty Network, Faculty for Palestine, Health workers Alliance for Palestine ஆகியனவும் முகாமிடும் மாணவருக்கு ஆதரவாக கையொப்பம் இட்டுள்ளன.
கனடாவில் முதலில் McGill University (Montreal) மாணவர் முகாம் இடலை ஆரம்பித்து இருந்தனர். பின்னர் University of British Columbia (Vancouver), University Ottawa, Western University (London, Ontario), University of Victoria (Victoria, BC), Vancouver Island University ஆகிய 6 பல்கலைக்கழகங்களில் காசா ஆதரவு முகாம்கள் அமைக்கப்பட்டன.
அதேவேளை அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பெருமளவு கைதுகளின் பின்னரும் மாணவர் முகாம்களை கட்டுப்படுத்த முடியாது போலீசார் திண்டாடுகின்றனர்.