JPMorgan வங்கி உலகில் இரண்டாவது பெரியது, அமெரிக்காவில் முதலாவது பெரியது. இதன் ஆரம்பம் 1895. 2000 அம்ம ஆண்டில் இதுவும் அமெரிக்காவின் மற்றுமோர் வங்கியான Chase Manhattan உடன் இணைந்திருந்தது. 2012 ஆம் ஆண்டளவில் இதன் மொத்த சொத்துக்கள $2500 பில்லியனுக்கும் அதிகம் (1.5 ரில்லியன்).
2005 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு காலங்களில் JPMorgan பல பெரு நட்டங்களை எதிர்பார்க்கக்கூடிய முதலீடுகளில் பங்கெடுத்தது. வேறு பல வங்கிகளும் வீடு அடமான நிறுவனக்களும் இவ்வாறு செய்திருந்தன. 2008 இல் அமெரிக்க பொருளாதாரம் சரிந்த போது இந்த வங்கிகளை எல்லாம் அமெரிக்க அரசு மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி பாதுகாத்தது.
அதேவேளை இந்த வங்கிகளுக்கு எதிராக வழக்குகளையும் தொடர்ந்தது. அந்த வழியில் இப்போது JPMorgan $13 பில்லியன் தண்டம் செலுத்த முன்வந்துள்ளது. ஆரம்பத்தில் இது $3 பில்லியன் மட்டுமே செலுத்த முன்வந்தது.