உலகின் முதலாவது செல்வந்தரான Elon Musk தனது X என்று அழைக்கப்படும் முன்னாள் Twitter பதிவில் இஸ்ரேல் காசாவில் பலஸ்தீனர்களை பழிவாங்கும் நோக்கில் செய்யும் தாக்குதல்களை கண்டித்து பதிவு செய்த பின் பல அமெரிக்க நிறுவனங்கள் X இல் விளம்பரங்கள் செய்வதை இடை நிறுத்தி உள்ளன.
IBM, Comcast, Paramount, Lionsgate, The European Commission ஆகியன ஏற்கனவே தமது விளம்பரங்களை X இல் பதிவு செய்வதை நிறுத்தி உள்ளன. Facebook, X போன்ற நிறுவனங்கள் விளம்பரங்கள் மூலம் பெரும் வருமானம் பெறுவன.
வெள்ளை மாளிகையும் Musk கின் பதிவை யூதர்களுக்கு எதிரானது (antisemitic) என்று சாடியுள்ளது.
ஆனால் Musk தனது பதிவை சிலர் திரிபு செய்கின்றனர் என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவில் பெரும் வர்த்தகங்கள், வங்கிகள், அரசியல் கட்சிகள் பெருமளவில் யூதர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.