போர்த்துக்கல் நாட்டின் கால்பந்தாட்ட வீரரான Cristiano Ronaldo 2015ம் ஆண்டு நியூ யார்க் நகரில் உள்ள Trump Tower என்ற அடுக்குமாடியில் வீடு (condo) ஒன்றை $18.5 மில்லியனுக்கு கொள்வனவு செய்திருந்தார். அது ரம்ப் சனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னான காலம்.
ஆனால் ரம்பின் 4 ஆண்டு ஆட்சியின் பின் அவரின் பெயரை கொண்ட சொத்துக்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளன. Ronaldo கொள்வனவு செய்திருந்த வீடும் தற்போது அரை விலைக்கும் விற்பனை செய்ய முடியாத நிலையில் உள்ளது.
நியூ யார்க் நகரின் 721 Fifth Avenue முகவரியில் உள்ள இந்த வீட்டை Ronaldo 2019ம் ஆண்டு $9 மில்லியனுக்கு விற்பனை செய்ய முனைந்திருந்தார். ஆனால் எவரும் கொள்வனவு செய்ய முன்வரவில்லை. தற்போது அந்த வீட்டின் விற்பனை விலையை $7.75 மில்லியன் ஆக குறைத்து உள்ளார் Ronaldo. தற்போதும் அந்த வீடு விற்பனை செய்யப்படவில்லை.
விற்பனைக்கு உள்ள இந்த அடுக்குமாடி வீட்டில் 3 அறைகளும், 3.5 மலசலகூடங்களும் உள்ளன. இதன் பரப்பளவு 2,510 சதுர அடி.