சுவிஸ் வங்கி (UBS, Union Bank of Switzerland) ஐரோப்பா, அமெரிக்கா, மத்தியகிழக்கு, ஆசிய ஆகிய இடங்களில் உள்ள 25 பெரும் நகரங்களின் வீட்டு விலைகளை ஆண்டுதோறும் மதிப்பிடுவது உண்டு. அந்த மதிப்பீட்டின்படி கனடாவின் Toronto வீட்டு விலைகள் ஆபத்தான bubble நிலையில் உள்ளன.
சுவிஸ் வங்கியின் கணிப்புப்படி 1.5 சுட்டியை அல்லது அதற்கு மேற்பட்ட சுட்டியை கொண்ட வீட்டு விலைகள் மிகையானவை அல்லது கவிழக்கூடிய bubble நிலையில் உள்ளன. சுவிஸ் வங்கி கணிப்புப்படி Toronto வீடுகளிகளின் தற்போதைய விலை சுட்டி 1.96 ஆகி உள்ளது. Toronto மட்டுமே வட அமெரிக்காவில் bubble நிலையில் உள்ளது.
Toronto நகரில் வாடகை வீடுகளின் வாடகை தொடர்ந்தும் குறைந்து வருகிறது. அனால் வீடுகளின் விலை மாறாக அதிகரித்து வருகிறது. கரோனா காரணமாக Toronto நகருக்கு வரும் குடிவரவாளர் தொகையும் குறைந்து உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் Toronto நகரின் சராசரி வாடகை 13.8% ஆல் வீழ்ந்து உள்ளது.
ஜெர்மனியின் Munich நகரம் 2.35 சுட்டியை பெற்று முதலாம் இடத்திலும், 2.26 சுட்டியை பெற்ற Frankfurt இரண்டாம் இடத்திலும் உள்ளன.
நியூ யார்க் நகரின் சுட்டி 0.56 ஆகி மட்டுமே உள்ளது. லண்டன் சுட்டி 1.26 ஆகவும், ஹாங் காங் சுட்டி 1.79 ஆகவும் உள்ளன.