Toronto முதல்வர் பதவி விலகினார், தொடர்பு காரணம்

Toronto முதல்வர் பதவி விலகினார், தொடர்பு காரணம்

கனடாவின் Toronto மாநகர முதல்வர் (Mayor) John Tory வெள்ளிக்கிழமை இரவு பதவி விலகியுள்ளார். தனக்கு கீழ் பணியாற்றிய பெண் ஒருவருடன் தொடர்பு கொண்டிருந்தமையே தனது பதவி விலகலுக்கு காரணம் என்று கூறியுள்ளார் John Tory.

கனடாவின் மிகப்பெரிய நகரான Toronto வில் இவர் 3 தடவைகள் (2014, 1018, 2022) முதல்வராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

ஆனாலும் தொடர்பை கொண்டிருந்த காலத்தில் மேற்படி ஊழியர் வேறு திணைக்களத்தில் பணியாற்றியதாக 68 வயதான Tory கூறியுள்ளார்.

Toronto Star பத்திரிகை மேற்படி பெண் 31 வயதுடைய ஆலோசகர் என்று கூறியுள்ளது.