கடந்த வெள்ளிக்கிழமை சீனா நடைமுறை செய்த புதிய தொழில்நுட்ப ஏற்றுமதி சட்டம் மூலம் சீனாவின் TikTok app தனது அமெரிக்க பிரிவை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்யப்படுவதை சீன அரசின் கட்டுப்பாட்டுள் எடுத்துள்ளது.
சீனாவின் புதிய ஏற்றுமதி சட்டப்படி TikTok கின் அமெரிக்க பிரிவு அமெரிக்காவுக்கு விற்பனை செய்யப்படுவது சீன அரச அனுமதியை பெறவேண்டும்.
TikTok அமெரிக்காவின் பிரிவு அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்யப்படவில்லை என்றால் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி அமெரிக்காவில் அதன் செயல்பாடு தடை செய்யப்படும் என்று ரம்ப் கூறியிருந்தார்.
TikTok app ஐ சீனாவின் ByteDance என்ற நிறுவனம் தற்போது உரிமை கொண்டுள்ளது.
Microsoft, Oracle, Walmart போன்ற பல அமெரிக்க நிறுவனங்கள் TikTok கின் அமெரிக்க பிரிவை கொள்வனவு செய்ய விரும்புகின்றன. அனால் இவை அனைத்தும் சீனாவிலும் செயல்படும் நிறுவனங்கள். அதனால் அவை சீன அரசையும் அனுசரித்து செயல்படவேண்டும்.
Centricus Asset Management Ltd., Triller Inc. ஆகிய இரண்டும் சில நாடுகளில் TikTok உரிமையை பெற $20 பில்லியன் வழங்க முன்வந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.