TikTok தடைக்கு ரம்ப், கொள்வனவுக்கு Microsoft

மிக குறுகிய காலத்தில் உலகம் எங்கும், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில், பிரபலமான TikTok என்ற app ஐ அமெரிக்க சனாதிபதி அமெரிக்காவில் தடை செய்ய முனையும் வேளை, அமெரிக்காவின் Microsoft நிறுவனம் அதை கொள்வனவு செய்ய முனைகிறது. இன்று வெள்ளி “We may be banning TikTok” என்று கூறியுள்ளார் ரம்ப். பாவனையாளர் விபரங்களை சீன அரசு பெறும் என்பதே ரம்பின் வாதம்.

எல்லா app களை போல இதுவும் பாவனையாளரின் தொலைபேசி இலக்கம், phone book இல் உள்ள நண்பர்கள், உறவினர்களின் தொலைபேசி இலக்கங்கள், அனுப்பும் செய்திகள், பார்வையிடும் வீடியோக்கள், போகும் இணையங்கள் எல்லாவற்றையும் பதிவு செய்யும். TikTok உரிமையாளர் சீனர்கள் என்றாலும், இதன் data அமெரிக்காவின் Virginia மாநிலத்திலும், backup சிங்கப்பூரிலும் உள்ளதாக கூறுகிறது TikTok. தமது software ஐ அமெரிக்கா ஆராயலாம் என்றும், தாம் மேலும் 10,000 பேரை அமெரிக்காவில் பணிக்கு அமர்த்த உள்ளதாகவும் கூறியுள்ளது TikTok.

வீடியோகளை பதிவு செய்யும் TikTok சீனாவில் ByteDance என்ற நிறுவனத்தால் 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டின் பின் இது உலகம் எங்கும் பரவியது. இது குறைந்தது 20 மொழிகளில் பயன்படுத்தக்கூடியது.

இந்த ஆண்டு மட்டும் சுமார் 180 மில்லியன் பேர் இந்த app ஐ தமது samrt phone களுக்கு இறக்கி உள்ளனர். 2016 ஆம் ஆண்டில் உலகம் எங்கும் இதை சுமார் 800 மில்லியன் பேர் பயன்படுத்தி உள்ளனர்.

TikTok கின் உரிமையை கொண்ட ByteDance இன் தற்போதைய முதலீட்டு சந்தை பெறுமதி குறைந்தது $100 பில்லியன் என்று கூறப்படுகிறது.

அண்மையில் 20 இந்திய இராணுவத்தினர் எல்லையில் பலியான பின், இந்தியா இந்த app ஐ தடை செய்திருந்தது. இந்தோனேசியா, பாகிஸ்தான், பங்களாதேசம் ஆகிய நாடுகள் இந்த app இளைஞர்களை பாதிக்கிறது என்று கூறி தடை செய்துள்ளன.