அமெரிக்காவின் Tesla என்ற நிறுவனம் விற்பனை செய்த மின்னில் இயங்கும் கார்களின் (electric car) எண்ணிக்கையிலும் அதிக தொகையான மின்னில் இயங்கும் கார்களை சீனாவின் BYD என்ற நிறுவனம் கடந்த காலாண்டில் உலக அளவில் விற்பனை செய்துள்ளது.
2023ம் ஆண்டின் இறுதி காலாண்டில் BYD மொத்தம் 526,000 மின் கார்களை உலக அளவில் விற்பனை செய்துள்ளது. அதே காலத்தில் Tesla 484,500 மின் கார்களை மட்டுமே உலக அளவில் விற்பனை செய்துள்ளது. BYD கார்கள் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படுவது இல்லை.
சீனாவில் Tesla Model 3 யின் விலை சுமார் $32,000. இது நிரம்பிய மின் கொள்கலத்தில் 272 மைல் தூரம் செல்லும்.
அதேவேளை சீனாவில் BYD யின் Seagull வகையின் விலை $10,000 மட்டுமே. இது நிரம்பிய மின் கொள்கலத்தில் 190 மைல் தூரம் செல்லும்.
BYD யின் மின்னில் இயங்கும் கார்கள் ஐரோப்பாவிலும் விரும்பி கொள்வனவு செய்யப்படுகின்றன. இதன் மின் கொள்கலங்கள் சில Tesla கார்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.