Telegram CEO Pavel Durov பிரான்சில் கைது 

Telegram CEO Pavel Durov பிரான்சில் கைது 

Telegram என்ற குறுந்தகவல் நிறுவனத்தை ஆரம்பித்தவரும், அதன் CEO ஆகியவருமான Pavel Durov இன்று பிரான்சின் விமான நிலையம் ஒன்றில் அவரின் private jet இறங்கியபோது கைது செய்யப்பட்டுள்ளார் என்று TF1 என்ற செய்தி நிறுவனம் கூறியுள்ளது..

Telegram சுமார் அரை பில்லியன் பாவனையாளரை கொண்டது என்று கூறப்படுகிறது. Facebook, YouTube, WhatsApp, Instagram, TikTok, Wechat ஆகியவற்றுக்கு அடுத்து இதுவே பெரியது.

இது ரஷ்யாவிலும் முன்னாள் சோவியத் நாடுகளிலும் பிரபலமானது.

Pavel Durpv ரஷ்யாவில் பிறந்தவர் என்றாலும் பூட்டினின் கொடுபிடி காரணமாக ரஷ்யாவை விட்டு வெளியேறி இருந்தார். 2013ம் ஆண்டு Telegram ஐ ஜெர்மனியில் இருந்து ஆரம்பித்திருந்தார். அதற்கு முன் VKontakte என்ற நிறுவனத்தை ரஷ்யாவில் ஆரம்பித்திருந்தார்.

சட்டப்படியான Telegram தலைமையகம் தற்போது British Virgin Island இல் இருந்தாலும், நடைமுறையில் இந்த தலைமையகம் டுபாயில் உள்ளது. இவரிடம் 4 நாடுகளின் குடியுரிமை உள்ளது என்று கூறப்படுகிறது.

இவர் சுமார் $15.5 பில்லியன் பெறுமதியான செல்வத்தை கொண்டுள்ளதாக Forbes கூறுகிறது.