Elon Musk என்பவரின் SpaceX நிறுவனத்தின் Starship என்ற விண்கலத்தின் 5ஆவது பரிசோதனை இன்று ஞாயிறு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. இந்த கலம் நியூ யார்க் நேரப்படி காலை 8:25 மணியளவில் Texas மாநிலத்தில் உள்ள Boca Chica என்ற இடத்தில் ஏவப்பட்டது. இந்த பரிசோதனை ஏவலில் எவரும் பயணித்து இருக்கவில்லை.
இது 121 மீட்டர் உயரமானது. அத்துடன் 16.7 மில்லியன் இறத்தல் உந்தத்தை கொண்டது.
இது இரண்டு பகுதிகளை கொண்டது. கீழே உள்ளது 33 ஏவு இயந்திரங்களை கொண்ட Super Heavy booster. இது 8 மில்லியன் எரிபொருளை (திரவ நிலை மெதேன்+திரவ நிலை oxygen) கொள்ளக்கூடியது. இது மேல் பகுதியை விண்ணுக்கு ஏவிய பின் திட்டமிட்டபடி ஏவு தளத்தில் இறங்கியது.
மேல் பகுதி Starship என்ற வீரர்கள் பயணிக்கும் கலத்தை கொண்டது. இது 3 மில்லியன் எரிபொருளை கொள்ளக்கூடியது.
விண்ணுக்கு ஏவப்பட்ட Starship பகுதி சுமார் 100 km உயரத்தில், சுமார் 27,000 km/h வேகத்தில் பூமியை வலம் வந்து பின் இந்து சமுத்திரத்தில் திட்டமிட்டபடி விழுந்தது.
2026ம் ஆண்டளவில் இந்த ஏவுகலமே நாசாவின் விண்வெளி வீரர்களை மீண்டும் சந்திரனுக்கு காவி செல்லவுள்ளது.
நாசா இந்த பணிக்காக SpaceX நிறுவனத்துக்கு $3.9 பில்லியனை வழங்கி உள்ளது.