கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் ஏவுகணை தாக்குதல் மூலம் ஈராக்கில் வைத்து படுகொலை செய்யப்பட்ட ஈரானின் ஜெனரல் Qasem Soleimani இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட சனநெரிசலுக்கு குறைந்தது 56 பேர் பலியாகி உள்ளனர்.
.
அத்துடன் இந்த ஊர்வலத்தில் சுமார் 200 பேர் காயமடைந்தும் உள்ளார். இந்த ஊர்வலம் சொலெமேனியின் சொந்த ஊரான Kerman பகுதியில் இன்று இடம்பெற்றது.
.
கடந்த சில தினங்களாக ஈரான் தனது ஆயுதங்களை நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு செய்வது அவர்களின் ஆயுதங்களை பாதுகாக்கவா அல்லது பயன்படுத்துவற்காகவா என்று அறியப்படவில்லை.
.
ஈராக், குவைத், சவுதி, UAE ஆகிய நாடுகளில் நிலை கொண்டுள்ள அமெரிக்க படைகள் உசார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.
.