ரஷ்யாவின் Sochi என்ற இடத்தில் நடைபெற்றுவந்த 2014 ஆம் ஆண்டுக்கான Winter ஒலிம்பிக் இன்று ஞாயிறுக்கிழமை நிறைவு பெற்றது. ஆரம்ப விழாவும், நிறைவு விழாவும் தொடங்கிய நேரம் இரவு 8:14. இதை 24-மணி முறைப்படி கூறின் 20:14 (இது 2014 ஆம் ஆண்டை பிரதிபலிக்கிறது). நிறைவு விழாவின்போது ஒலிம்பிக் கொடி தென்கொரியாவிடம் கையளிக்கப்பட்டது. அடுத்த Winter ஒலிம்பிக் தென்கொரியாவில் உள்ள Pyeongchang என்ற இடத்தில் 2018 ஆம் ஆண்டில் நடைபெறும்.
விழாவை நடாத்திய ரஷ்யா முன்னிலையில் மொத்தம் 33 பதக்கங்களை வெற்றி கொண்டிருந்தது. அதற்கு அடுத்ததாக அமெரிக்கா 28 பதக்கங்களை வெற்றி கொண்டிருந்தது. பிரபல விளையாட்டுக்களில் ஒன்றான ice hockey க்கான முதல் இடங்களை, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இரண்டையும், கனடா பெற்றிருந்தது.
ரஷ்யாவின் தென் பகுதிகளில் வாழும் சில இஸ்லாமிய குழுக்கள் Sochi யில் தாக்குதல்கள் நடாத்தலாம் என கருதியிருந்தாலும் அவ்வாறு எதுவும் பெரிதாக நடைபெறவில்லை.
சில முன்னணி முடிவுகள்:
1. ரஷ்யா: 13 Gold , 11 Silver, 9 Bronze
2. அமெரிக்கா: 9 Gold , 7 Silver, 12 Bronze
3. நோர்வே: 11 Gold , 5 Silver, 10 Bronze
4. கனடா: 10 Gold , 10 Silver, 5 Bronze
5. நெதர்லாந்து: 8 Gold , 7 Silver, 9 Bronze
5. நெதர்லாந்து: 8 Gold , 7 Silver, 9 Bronze
6. ஜெர்மனி: 8 Gold , 6 Silver, 5 Bronze
7. ஆஸ்ரியா: 4 Gold , 8 Silver, 5 Bronze
8. பிரான்ஸ்: 4 Gold , 4 Silver, 7 Bronze