அமெரிக்க உளவு திணைக்களத்தின் முன்னாள் பணியாளர் Edward Snowden பின்னாளில் அமெரிக்காவின் உளவு சம்பந்தமான இரகசியங்களை ஆதாரங்களுடன் பகிரங்கப்படுத்தி இருந்தார். அதனால் அவர் அமெரிக்க அரசின் எதிரியும் ஆனார். அமெரிக்காவை விட்டு தப்பியோடிய இவர் சிலகாலம் Hong Kong நகரிலும் மறைந்திருந்தார்.
.
.
Snowden Hong Kong நகரில் மறைந்திருந்த காலத்தில் அவருக்கு வதிவிட வசதி வழங்கியவர்கள் அங்கிருந்த இலங்கை அகதிகள் என்றும் கூறப்படுகிறது. அந்த இலங்கை அகதிகளை தேடி தற்போது இலங்கை CID போலீசார் Hong Kong சென்றுள்ளதாக South China Morning Post கூறுகிறது. இதனால் அந்த அகதிகள் குடும்பம் பயம் அடைந்து உள்ளதகாவும் கூறப்படுகிறது.
.
.
“I felt very scared and nervous” என்கிறார் Supun Thilina Kellapatha. இவருடன் இவரின் மனைவி Nadeeka Dilrukshi Nonis, இரண்டு பிள்ளைகள் ஆகியோர் அகதிகள் ஆக உள்ளனர். இவர்களுடன் Ajith Pushpakumar என்ற முன்னாள் இலங்கை படையினரும் அங்குள்ளார் என்கிறது அந்த செய்தி.
.
.
இலங்கை அகதிகள் மட்டுமன்றி Vanessa Mae Rodel என்ற பிலிப்பீன் அகதிகள் குடும்பமும் Snowdenனுக்கு உதவி உள்ளனர்.
.
2013 ஆம் ஆண்டுகளில் Hong Kong நகரில் மறைந்திருந்த Snowden பின்னர் பாதுகாப்பு தேடி ரஷ்யா சென்று அகதி ஆனார்.
.
.
படம்: South China Morning Post
.