சீனாவின் Sinopec நிறுவனம் இலங்கையில் $4.5 பில்லியன் செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை இலங்கையில் அமைக்க உள்ளது.
இந்த செய்தியை Reuters செய்தி சேவைக்கு இலங்கையின் எரிபொருள் அமைச்சர் Kanchana Wijiesekera தெரிவித்துள்ளார்.
இந்த நிலையம் தொடர்ந்தும் அபிவிருத்தி செய்யப்பட்டால் சீனாவின் முதலீடு மேலும் அதிகரிக்கும். இந்த முதலீடு சீனாவின் Belt and Road திட்டத்தின் கீழ் அமைகிறது.
Sinopec ஏற்கனவே இலங்கையில் 150 எரிபொருள் நிரப்பும் நிலையங்களை அமைக்க அனுமதி கொண்டுள்ளது.
Sinopec சவுதியிலும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை கொண்டுள்ளது.
இலங்கையில் 1969ம் ஆண்டு நிறுவப்பட்ட சபுகஸ்கந்தை எரிபொருள் சுத்திகரிப்பு ஆலை நாள் ஒன்றுக்கு 38,000 பரல்களை சுத்திகரிக்கும்.