International System of Units அல்லது SI அலகு முறைமை பெரிய எங்களை குறிப்பிட kilo, mega, giga, tera ஆகிய குறியீடுகளை தற்போது பயன்படுத்துகின்றது.
வேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்பம் அவற்றுள் சேமிக்கப்படும் தரவுகளின் அளவுகளையும் வேகமாக பெருக்கி வருகிறது. அதனாலேயே புதிய பெரிய அலகுகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இந்த விபரம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 27வது General Conference on Weights and Measurements என்ற அமர்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போதைய அலகுகள்:
1 kilo = 1,000 (ஆயிரம் மீட்டர் 1 km, அல்லது 1 கிலோமீட்டர்)
1 mega = 1,000,000 (1 MB = ஒரு மெகா பைஜிட்ஸ் = 1,000,000 பைஜிட்ஸ்)
1 giga = 1,000,000,000 (1 GB = ஒரு கிகா பைஜிட்ஸ் = 1,000,000,000 பைஜிட்ஸ்)
1 tera = 1,000,000,000,000 (1 TB = ஒரு ரேறா பைஜிட்ஸ்)
1 zeta = 1,000,000,000,000,000,000,000 ஒன்றும் 21 பூச்சியங்களும் (செரா)
1 yotta = 1,000,000,000,000,000,000,000,000 (ஒன்றும் 24 பூச்சியங்களும்)
புதிய அலகுகள்:
1 ronna = 1,000,000,000,000,000,000,000,000,000 (ஒன்றும் 27 பூச்சியங்களும்)
1 quetta = ஒன்றும் 30 பூச்சியங்களும்
தற்போது பூமியின் எடையை புதிய அலகை பயன்படுத்தி 5,972 yottagrams அல்லது Yg என்றும் கூறலாம்.
1991ம் ஆண்டுக்கு பின் தற்போதே புதிய அலகுகள் SI திட்டத்தில் இணைக்கப்பட்டு உள்ளன.
தற்போது கொள்வனவு செய்யப்படும் புதிய கணனிகளின் hardisk size 1 அல்லது 2 TB ஆக இருக்கும்.