ஒரு NATO அணி நாடான துருக்கி சீனா தலைமையில் அமைந்துள்ள Shanghai Corporation Organization (SCO) என்ற அமைப்பில் இணைய தீர்மானித்து உள்ளது. இதனால் விசனம் கொண்ட ஜெர்மனியின் Chancellor Olaf Scholz துருக்கியின் இச்செயல் “very irritated” என்று கூறியுள்ளார்.
ஏனைய நேட்டோ அணி நாடுகளில் இருந்து சிறிது வேறுபாடும் துருக்கி அவ்வப்போது ஏனைய நேட்டோ நாடுகளை விலகி செயற்படுவது உண்டு. துருக்கியின் சனாதிபதி Tayyip Erdogan ஐ இராணுவ சதி மூலம் விரட்ட சில மேற்கு நாடுகள் செயற்பட்டன என்றும் கருதப்படுகிறது. அந்த இராணுவ சதி முயற்சி முறியடிக்கப்பட்டு இருந்தது.
கடந்த கிழமை உஸ்பெக்கிஸ்தானில் இடம்பெற்ற இந்த ஆண்டுக்கான SCO அமர்வுக்கு துருக்கியின் சனாதிபதி சென்று இருந்தார். அங்கேயே துருக்கியின் தீர்மானத்தை அவர் தெரிவித்து இருந்தார். 2013ம் ஆண்டு முதல் துருக்கி ஒரு பார்வையாளர் நாடாக SCO அமர்வுகளில் பங்களித்து வந்துள்ளது.
துருக்கி முன்னர்போல் முழுமையாக மேற்கில் தங்கியிராது வளரும் கிழக்கிலும் இணைய முனைந்து வருகிறது.
துருக்கியின் தீர்மானம் தொடர்பாக அமெரிக்கா இதுவரை கருத்து எதையும் தெரிவித்து இருக்கவில்லை.