Shanghai Cooperation Organization (SCO) அமர்வு இன்று புதன் Kazakhstan நாட்டின் Astana நகரில் ஆரம்பமாகிறது. இதில் ரஷ்யாவின் பூட்டின், சீனாவின் சீ ஆகியோர் நேரடியாக பங்கொண்டாலும் இந்திய பிரதமர் மோதி இந்த அமர்வை தவிர்த்துள்ளார்.
கடந்த ஆண்டு இந்தியாவே SCO அமர்வை தலைமைதாங்கி செய்திருந்தாலும், அமர்வு இணையம் மூலமே நடைபெற்றது. அதனால் பூட்டின், சீ இந்தியா செல்லவேண்டிய தேவை இருந்திருக்கவில்லை.
1996ம் ஆண்டு முதல் ரஷ்யா, சீனா உட்பட 5 நாடுகள் ஆரம்பித்து Shanghai 5 என்று இயங்கிய அமைப்பு 2001ம் ஆண்டு முதல் SCO ஆனது. 2017ம் ஆண்டு இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்தன. 2023 ஆண்டு ஈரானும் இணைந்தது.
இந்த ஆண்டு பெலருஸ் (Belarus) இந்த அமைப்பில் இணைவதால் தற்போது 10 நாடுகள் SCO அங்கத்துவதை கொள்கின்றன.
மொத்தம் 10 நாடுகளில் 9 நாடுகள் மேற்கு நாடுகளை பெரிதும் நாடாது இருக்க இந்தியா மட்டுமே மேற்கின் நட்பை விரும்பும் நாடாக தற்போதுமாறியுள்ளது. அதனால் SCO அமைப்புடன் ஒத்துப்போவது இந்தியாவுக்கு கடினமாக இருக்கலாம்.