Samsung இலாபம் 56% ஆல் வீழ்ச்சி

Samsung

Samsung என்ற தென்கொரியாவின் இலத்திரனியல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையான காலாண்டின் இலாபம் (operating profit) 56% ஆல், அல்லது $5.6 பில்லியன் டாலரால் வீழ்ந்துள்ளது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நிலவிவரும் பொருளாதார யுத்தமே Samsung நிறுவன இலாபம் வீழ்ச்சி அடைய முக்கிய காரணம் என்று கருதப்படுகிறது.
.
இதே காலாண்டில் Samsung நிறுவனத்தின் வருமானமும் $48 பில்லியன் பெறுமதியால் வீழ்ந்துள்ளது.
.
Memory chip உட்பட பல இலத்திரனியல் பொருட்களை தயாரிக்கும் தென்கொரியாவின் Samsung நிறுவனம் அவற்றை சீனாவின் Huawei நிறுவனத்துக்கு விற்பனை செய்வதுண்டு. அமெரிக்கா அண்மையில் Huawei மீது விதித்த தடைகள் Samsung நிறுவனத்தின் வர்த்தகத்தை பாதித்து உள்ளது.
.