ரஷ்ய ஜனாதிபதி பூட்டினும், இந்திய பிரதமர் மோதியும் இன்று வெள்ளி ரஷ்யாவிடமிருந்து இந்தியாவுக்கான S-400 ஏவுகணை கொள்வனவில் ஒப்பம் இட்டுள்ளனர். இந்த ஏவுகணை கொள்வனவின் பெறுமதி சுமார் $5 பில்லியன் ஆகும்.
.
பூட்டின் வியாழன் இந்தியா பயணித்திருந்தார். அக்காலத்திலேயே இந்த நிலத்தில் இருந்து வானத்துக்கான S-400 ஏவுகணை கொள்வனவு ஒப்பமிடப்பட்டு இருந்தது. இந்த ஏவுகணை எதிரியின் யுத்த விமானங்களை மட்டுமன்றி cruise, ballistic ஏவுகணை போன்ற மற்றைய பல ஏவுகணைகளையும் தங்கி அழிக்கக்கூடியது. இந்த ஏவுகணை கிடையாக 400 km தூரத்துக்கும், 185 km உரத்துக்கும் சென்று எதிரிகளை தாக்க வல்லது.
.
இன்று ஒப்பமிடப்பட்ட இந்த கொள்வனவுக்கான பேச்சுவார்த்தைகள் 2015 ஆம் ஆண்டிலேயே ஆரம்பிக்கப்பட்டு இருந்தது.
.
சீனாவிடம் ஏற்கனவே S-400 ஏவுகணைகள் உள்ளன. இந்தியாவின் கைகளுக்கு S-400 வருவதால் அதிகம் பின்தளப்படுவது பாகிஸ்தானே.
.
சீனா S-400 ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்ததால், Countering America’s Adversaries Through Sanctions Act என்ற சட்டதுக்கு அமைய, அமெரிக்காவின் சில தடைகளுக்கு உள்ளானது. ஆனால் அமெரிக்கா இந்தியாவையும் அதே காரணத்துக்காக தடை செய்யுமா என்பதை பொறுதிருத்தே பார்க்க வேண்டும்.
.