1994 ஆம் ஆண்டு ஆபிரிக்க நாடான றவன்டாவில் (Rwanda) இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சூத்திரதாரியாக இருந்த Hutu இன Felicien Kabuga என்பவர் இன்று சனிக்கிழமை Paris நகருக்கு அண்மையில் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். தற்போது 84 வயதுடைய Kabuga வேறு பெயர் ஒன்றை பயன்படுத்தி வந்துள்ளார்.
.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் இவரின் நிறுவனம் ஒன்றே பெரும் தொகை வாள்கள், கத்திகள் போன்ற ஆயுதங்களை இறக்குமதி செய்து, Interahamwe என்ற வன்முறை குழு மூலம் Tutsi மக்கள் மீது வன்முறையை ஆரம்பிக்க உடந்தையாக இருந்துள்ளது.
.
அத்துடன் வன்முறையை வழிப்படுத்திய Radio Television Mille Collines என்ற ஒலிபரப்பு நிறுவனமும் இவரின் ஆக்கமே.
.
1994 ஆம் ஆண்டு அங்கு 100 நாட்கள் இடம்பெற்ற வன்முறைகளுக்கு சுமார் 800,000 Tutsi மக்களும், அவர்களுக்கு ஆதரவு செய்ய முன்வந்த Hutu மக்களும் பலியாகினர்.
.
கடந்த 25 ஆண்டு காலங்களில் இவர் ஜெர்மனி, பெல்ஜியம், கொங்கோ, கென்யா, சுவிஸ் ஆகிய நாடுகளில் ஒளிந்து வாழ்ந்துள்ளார்.
.
இவரை கைது செய்ய உதவுவோர்க்கு $5 மில்லியன் சன்மானம் வழங்க அமெரிக்கா முன்வந்திருந்தது.
.
1994 ஆம் ஆண்டும் றவன்டாவில் சனாதிபதி Juvenal Habyarimana படுகொலை செய்யப்பட்டு இருந்தார். Kabuga சனாதிபதி Habyarimana வுக்கு நெருக்கமானவர். அத்துடன் Kabuga வின் மகள் Habyariman வின் மகன் ஒருவரை திருமணம் செய்திருந்தார்.
.
வன்முறை காலத்தில் பாதுகாப்பு அமைச்சர் ஆக இருந்த Augustin Bizmana என்பவரும், படைகளின் அதிகாரி Protais Mpiranya வும் தற்போதும் தேடப்பட்டு வருகின்றனர்.
.