அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் Rex Tillerson நேற்று தனது பதவியை துறந்துளார். இவர் ஆபிரிக்க நாடுகளுக்கு சேவையின் காரணமாக பயணம் ஒன்றை மேற்கொண்டு இருந்த பொழுது, கடந்த வெள்ளிக்கிழமை, ஜனாதிபதி ரம்ப் இவரை பதவி விலகுமாறு கூறியதாக கூறப்பட்டுள்ளது. உடனடியாக நாடு திரும்பிய Tillerson திங்கள் பதவியை துறந்துள்ளார்.
.
.
ஜனதிபதி ரம்புக்கும், Tillersonனுக்கும் இடையே முரண்பாடுகள் நீண்ட காலமாகவே இருந்து வந்துள்ளன. ஆனால் மிக முக்கிய முரண்பாடு அண்மையில் ரம்ப் வடகொரியா விடயத்தில் தன்னிசையாக எடுத்துக்கொண்ட அணுகுமுறையாகும். வடகொரிய தலைவரின் செய்திக்கு அமைய, வெளியுறவு செயலாளர் Tillersonனுக்கு தெரிவிக்காது, தான் வடகொரியா தலைவரை சந்திக்கவுள்ளதாக ரம்ப் கூறியிருந்தார்.
.
அமெரிக்காவின் புதிய வெளியறவு செயலாளராக CIA உயர் அதிகாரி Mike Pompeo நியமிக்கப்பட உள்ளார்.
.
அமெரிக்காவின் புதிய வெளியறவு செயலாளராக CIA உயர் அதிகாரி Mike Pompeo நியமிக்கப்பட உள்ளார்.
.
ரம்ப் தனது 14 மாத கால ஆட்சியில் பல உயர் அதிகாரிகளை இழந்துள்ளார்.
.
Gary Cohn (Director of the National Economic Council) அண்மையில் ரம்ப் தனிச்சாசையாக நடைமுறை செய்யவிருந்த aluminum, steel மீதான இறக்குமதி வரியை எதிர்த்து பதவி விலகியிருந்தார். ரம்ப் பின்னர் அந்த வரியில் இருந்து கனடாவையும், மெக்ஸிகோவையும் நீக்கியிருந்தார்.
.
.
வெள்ளை மாளிகை communication director Hope Hicks கடந்த மாதம் 28ஆம் திகதி தனது பதவியைவிட்டு விலகி இருந்தார்.
.
.
Steve Bannon, Rob Porter, Dr. Brenda Fitzgerald, FBI deputy director Andrew McCabe, Omarosa Manigault, Tom Price, Sebastian Gorka, Anthony Scaramucci, Reince Priebus, White House press secretary Sean Spicer, Michael Dubke, Walter Shaub, FBI Director James Comey, national security adviser Michael Flynn, Sally Yates, Preet Bharara, Kate Walsh ஆகியோர் 14 மாத கால ரம்ப் அரசில் இருந்து நீங்கியவர்கள் அல்லது நீக்கப்பட்டவர்கள்.
.
.
இதுவரை எந்தவொரு அமெரிக்க ஜனாதிபதி ஆட்சியிலும் இத்தொகையானோர் பதவி விலகியிருக்கவில்லை.
.
.