Pfizer மருந்து வறிய நாடுகளின் கைகளுக்கு எட்டா

Pfizer மருந்து வறிய நாடுகளின் கைகளுக்கு எட்டா

Pfizer (f-பைசர்) என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் 90% காரோன தடுப்பு வல்லமை கொண்ட மருந்து தற்போதைக்கு வறிய நாடுகளின் கைகளுக்கு எட்டாது என்று கூறப்படுகிறது. அதனால் வறிய நாடுகள் ரஷ்யா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் தயாரிக்கும் கரோனா மருந்தைகளையே எதிர்பார்க்கவேண்டும்.

2021 ஆம் ஆண்டு முடிவுக்குள் Pfizer சுமார் 1.3 பில்லியன் கரோனா தடுப்பு மருந்தை தயாரிக்கவுள்ளது. ஆனால் அதில் 1.1 பில்லியன் ஏற்கனவே அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஜப்பான், மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன.

European Commission தாம் 300 மில்லியன் Pfizer மருந்துகளை பெற ஒப்பந்தம் செய்துள்ளதாக இன்று புதன் கூறியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஏற்கனவே AstraZenaca, Sanofi, Johnson & Johnson, Moderna, CureVac, Novavax ஆகிய மருந்துகளை கொள்வனவு செய்யவும் முயன்று வருகின்றன.

அத்துடன் Pfizer தயாரிக்கும் மருந்து காவப்படும்போதும், வைத்தியசாலையில் வைக்கப்பட்டு இருக்கும்போதும் – 80 C (minus 80 degree Celsius) வெப்பநிலையில் இருத்தல் அவசியம். பெரும்பாலான வறிய நாடுகளிடம் இந்த வசதிகள் இல்லை. பல அமெரிக்க வைத்தியசாலைகளிடமே இவ்வகை குளிர்சாதன பெட்டிகள் இல்லை.

உரிய வெப்பநிலையில் வைக்கப்படாவிடின் இந்த மருந்து வழங்கும் தடுப்பு பொய்யானதாகவே இருக்கும்.