அமெரிக்காவின் House Speaker நான்சி பெலோஷி (Nancy Pelosi) தாய்வானுக்கு உத்தியோக பயணம் ஒன்றை அடுத்த மாதம் மேற்கொள்ள உள்ளதாக அமெரிக்கா அறிவித்து உள்ளது. அமெரிக்காவும், ஐ.நாவும் தாய்வானை ஒரு நாடாக ஏற்றுக்கொள்ளாத நிலையில் பெலோஷியின் திட்டமிட்ட பயணம் சீனாவுக்கு விசனத்தை ஏற்படுத்தி உள்ளது.
கூறியபடி பெலோஷி பயணத்தை மேற்கொண்டால் சீனா “forceful measures” எடுக்கும் என்று சீன வெளியுறவு அமைச்சு கூறி இருந்தாலும் அது எவ்வகை நடவடிக்கை என்று கூறவில்லை.
ஏற்கனவே முறிந்து உள்ள அமெரிக்க-சீன உறவு பெலோஷி பயணத்தால் மேலும் முறிய இடமுண்டு. அதனால் உலக வர்த்தகமும் பாதிப்பு அடையும்.
அமெரிக்கா சனாதிபதி பைடெனும் “I think that the military thinks it’s not a good idea right now” என்று நேற்று புதன் கூறியுள்ளார்.
அதேவேளை பைடென் சீன சனாதிபதியுடன் இந்த மாத இறுதிக்குள் நேரடியாக தொடர்பு கொள்ளவும் முனைகிறார். யூக்கிறேன் விசயத்தில் சீனாவின் உதவியை பெறுவதே பைடெனின் முதல் நோக்கம்.
அமெரிக்க படையினரின் கணிப்பும் பெலோஷி பயணத்தை ஆதரிக்கவில்லை. நேற்று புதன் அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் இடம்பெற்ற Aspen Security Forum என்ற நிகழ்வில் உரையாற்றிய CIA தலைவர் Bill Burns இந்த விசயத்தில் சீன சனாதிபதியின் உறுதிப்பாட்டை (determination) குறைத்து கணிப்பிட வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
பெலோஷியின் இந்த பயணம் முதலில் கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற இருந்திருந்தாலும், பெலோஷி COVID தொற்று இருந்தமையால் பின்போடப்பட்டு இருந்தது.