பிரித்தானியாவின் Oxford பல்கலைக்கழகத்துக்கு இந்தியாவின் Serum Institute என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் 50 மில்லியன் பிரித்தானிய பௌண்ட்ஸ் (சுமார் $66 மில்லியன்) பணத்தை நன்கொடையாக வழங்குகிறது. Serum Life Science என்ற நிறுவனம் மூலமே இந்த நன்கொடை செய்யப்படுகிறது.
இந்த நன்கொடை Oxford பல்கலைக்கழகத்தில் ஆய்வு நிலையம் ஒன்றை அமைக்க பயன்படும். இந்த ஆய்வு நிலையம் Poonawalla Vaccines Research Building என்றும் பெயரிடப்படும்.
Oxford பல்கலைக்கழகம் AstraZeneca நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த கரோனா தடுப்பு மருந்தை இந்தியாவின் Serum நிறுவனம் Covishield என்ற பெயரில் தயாரித்து வருகிறது.
Serum நிறுவனத்தை Cyrus Poonawalla 1966ம் ஆண்டு ஆரம்பித்து இருந்தார். தற்போது அவரின் மகன் Adar இந்த நிறுவனத்தின் உரிமையை கொண்டுள்ளார்.
2019ம் ஆண்டு Oxford பல்கலைக்கழகம் Cyrus க்கு கௌரவ பட்டதாரி (honorary degree) பட்டமும் வழங்கி இருந்தது.