Nijjar விசாரணைக்கு இந்தியாவை உதவ அழைக்கிறது அமெரிக்கா

Nijjar விசாரணைக்கு இந்தியாவை உதவ அழைக்கிறது அமெரிக்கா

கனேடிய சீக்கிய பிரிவினைவாதியான Hardeep Singh Nijjar கனடாவில் படுகொலை செய்யப்பட்டதை விசாரணை செய்யும் கனடாவுக்கு இந்தியா உதவ வேண்டும் என்று அமெரிக்கா இன்று வெள்ளி கேட்டுள்ளது.

அமெரிக்காவின் Secretary of State Anthony Blinken இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். Blinken தனது உரையில் “It would be important that India work with Canadians on this investigation” என்று கூறியுள்ளார்.

இக்கொலையில் இந்திய உளவாளிகளின் தொடர்பு இருக்கிறது என்று கூறுகிறது கனடா. அதற்கான ஆதாரங்களை இந்தியாவுக்கு பல கிழமைகளுக்கு முன்னரே வழங்கியதாகவும் பிரதமர் ரூடோ கூறியுள்ளார்.

அமெரிக்காவின் இன்றைய அழைப்பு இந்திய பிரதமர் மோதியை மேலும் நெருக்கடியான நிலைக்கு தள்ளும்.

கனடாவுக்கு Nijjar கொலை தொடர்பான இரகசியங்களை Five Eyes அணி நாடுகளும் வழங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. Five Eyes அணியில் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, அஸ்ரேலியா, நியூ சிலாந்து ஆகிய 5 நாடுகள் உள்ளன.