மொத்தம் 100 அமரிக்க படையினரை விமானியில்லா வேவுவிமான தளம் ஒன்றை அமைக்கும் பணியில் அமர்த்த Niger என்ற நாட்டுக்கு அனுப்பியுள்ளது அமெரிக்காவின் ஒபாமா அரசு. இந்த தகவலை ஒபாமா வெள்ளிக்கிழமை (2013-02-22) தெரிவித்துள்ளார். இந்த தளத்தில் இருந்து Predator போன்ற விமானியில்லா வேவுவிமாங்கள் (UAV, Unmanned Aerial Vehicle) இயக்கபப்டும். இந்த தளம் Niger நாட்டு தலைநகர் Niamey இல் அமையும். இவர்கள் மாலியில் (Mali) சண்டையிடும் பிரெஞ்சு இராணுவத்துக்கு தேவைப்பட்ட உளவுகளை செய்வார்கள்.
ஒபாமா தன கூற்றில், Niger சென்ற அமெரிக்க இராணுவத்தினர் ‘தற்பாதுகாப்புக்காகவே’ ஆயுதம் கொண்டிருப்பார் என்றுள்ளார். அப்படியானால் இங்கு நிலைகொண்டிருக்கும் அமெரிக்காவின் வேவு விமானக்களும் அவற்றின் தற்பாதுகாப்புக்காகவா ஆயுதங்களை கொண்டிருக்கும் என்பதை விளக்கமாக கூறவில்லை.
அமெரிக்காவுக்கு இன்னுமோர் நிரந்தர UAV தளம் Djiboutie என்ற நாட்டில் உள்ளது. ஆனால் இந்த தளம் யுத்தம் நடக்கும் மாலியில் இருந்து சுமார் 4,800 km தூரத்தில் உள்ளது. எதியோப்பிய விமானநிலையத்தில் இருந்தும் சிலவேளைகளில் அமெரிக்க UAV களை இயக்குவதும் உண்டு.