Netanyahu கைதுக்கு ICC அழைப்பு, குமுறுகிறார் பைடென் 

Netanyahu கைதுக்கு ICC அழைப்பு, குமுறுகிறார் பைடென் 

இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu, இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant, ஹமாஸ் அரசியல் தலைவர்கள் Yahya Sinway, Ismail Haniyeh, ஆயுத பிரிவு தலைவர் Mohammed Deif ஆகியோரை காசா யுத்தத்தில் “war crime” செய்த குற்றத்துக்காக கைது செய்யும்படி ICC அழைப்பு விடுத்துள்ளது.

தற்போது இது ஓர் அழைப்பு மட்டுமே. இந்த அழைப்பின் ஆதாரங்களை ICC நீதிபதிகள் ஆராய்ந்து கைதுக்கான கட்டளை அறிவிப்பர், அல்லது அறிவிப்பை நிராகரிப்பர்.

இந்த ICC அழைப்பால் குமுறுகிறது அமெரிக்காவும், இஸ்ரேலும். அமெரிக்க சனாதிபதி பைடென் இஸ்ரேல் தலைவர்களை கைது செய்ய முனைவதை கடுமையாக சாடியுள்ளார். காசா யுத்தத்தை பைடென் “Let me be clear, what’s happening is not genocide” என்று விபரித்துள்ளார்.

ஆனால் வழமைக்கு மாறாக ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், பெல்ஜியம், சொலவீனியா ICC அழைப்பை ஏற்று கொண்டுள்ளன. கனடா போன்ற நாடுகள் மதில் மேல் பூனையாக காத்திருக்கின்றன.

அமெரிக்காவும், இஸ்ரேலும் ICC அங்கத்துவ நாடுகள் அல்ல. அனால் கைதுக்கு நீதிபதிகள் அழைப்பு விடுத்தால் அவர்கள் பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு செல்லும்போது கைது செய்யப்படலாம்.

இதுவரை ICC ஆபிரிக்க நாட்டவர்களையே விருப்பம்போல் பிடித்து விசாரணை செய்து தண்டித்து இருந்தது. ICC இதுவரை 46 கைதுகளுக்கு அழைப்பு விடுத்தலும், அதில் 17 பேர், ரஷ்யாவின் பூட்டின் உட்பட, தற்போதும் அகப்படாமல் உள்ளனர்.