நியோவைஸ் (Neowise, C/2020 F3) என்ற வால்வெள்ளியை (comet) வரும் சில நாட்களில் இலகுவாக காணக்கூடியதாக இருக்கும். பூமியின் மத்திய கோட்டுக்கு வடக்கே உள்ள நாடுகள் மட்டுமே இதை காணக்கூடியதாக இருக்கும். மத்திய கோட்டுக்கு தெற்கே உள்ள அஸ்ரேலியா போன்ற நாடுகள் காண முடியாது.
.
இந்த வால்வெள்ளி வரும் 23 ஆம் திகதி (ஜூலை 23) பூமிக்கு அண்மையில் செல்லும். அப்பொழுது இது பூமியில் இருந்து சுமார் 103 மில்லியன் km தொலைவில் இருக்கும். இதன் குறுக்களவு சுமார் 5 km என்று கணிப்பிடப்படுகிறது. இது தனது பாதையை ஒரு முறை சுற்ற சுமார் 6,800 ஆண்டுகள் தேவை. அதாவது தற்போதைய இடத்துக்கு மீண்டும் வர சுமார் 6,800 ஆண்டுகள் தேவைப்படும்.
.
ஜூலை 20 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை இதை வடமேற்கு திசையில் காணக்கூடியதாக இருக்கும். வானம் முகில்கள் இல்லாது, மின் விளக்குகளின் ஒளியும் இல்லாது இருப்பின், Big Dipper நாசத்திரங்களுக்கு கீழே Neowise தெரியும்.
.
சிலவேளைகளில் கண்களால் காணக்கூடியதாக இருப்பினும், binocular போன்ற தொலை நோக்கிகள் மூலம் காண்பது இலகுவாக இருக்கும். தரமான zoom உள்ள புகைப்பட கருவிகளும் நல்ல படங்களை எடுக்க பயன்படும்.
.
இவ்வகை comets உறைந்த பணியை கொண்டவை. இவை சூரியனுக்கு அண்மையில் வரும்போது சிறிதளவு ஆவியாகி வால் போன்ற பாகத்தை தோற்றுவிக்கும்.
.