NATO மீது ரஷ்யா ஏவுகணை மிரட்டல்

NATO மீது ரஷ்யா ஏவுகணை மிரட்டல்

ரஷ்யா மீதான NATO அணியின் மிரட்டல் தொடர்ந்தால், ரஷ்யா தனது நடுத்தர தூர அணு ஏவுகணைகளை (intermediate-range nuclear missiles) NATO நாடுகள் நோக்கி நகர்த்தும் என்று இன்று திங்கள் கூறியுள்ளது. இந்த எச்சரிக்கையை ரஷ்யாவின் உதவி வெளியுறவு அமைச்சர் Sergei Ryabkov தொடுத்து உள்ளார்.

யுக்கிரைன் NATO அணியில் இணைவதை ரஷ்யா எந்த வழி மூலமும் தடுக்க முனைகிறது. இந்த விசயத்துக்கு மேற்கு நாடுகள் பொருளாதார தடைகளை மட்டுமே பயன்படுத்த உள்ளதாக கூறினாலும், ரஷ்யா இராணுவ நகர்வுகளை பயடுத்தும் என்று கூறி வருகிறது.

Intermediate-range ஏவுகணைகள் 500 km முதல் 5,500 km தூரம் வரையிலான குறிகளை தாக்க வல்லன. எதிரிகள் இவற்றை கண்காணித்து அழிப்பது கடினம். Cold War முடிவில் இவ்வகை ஏவுகணைகள் ஐரோப்பாவில் தடை செய்யப்பட்டு இருந்தன. அதன்படி அமெரிக்காவும், சோவியத்தும் பல்லாயிரம் இவ்வகை ஏவுகணைகளை அழித்தன.

ஆனால் அமெரிக்கா 2019ம் ஆண்டு மேற்படி இணக்கத்தில் இருந்து விலகியது. ரஷ்யா 9M729 வகை ஏவுகணைகளை ஐரோப்பா நோக்கி நகர்த்துவதாக அமெரிக்கா காரணம் கூறியது.

அமெரிக்கா தனது கவனம் முழுவதையும் சீனா மீது கொண்டிருக்க விரும்பும் நேரத்தில் ரஷ்யாவின் நகர்வுகள் அமெரிக்க கவனத்தை திசை திருப்ப வைக்கிறது.