NATO அங்க துருக்கிக்கு ரஷ்ய யுத்த விமானங்கள்?

Turkey

NATO அணியின் முக்கியதொரு அங்க நாடான துருக்கி NATO அணியின் முதல் எதிரியான ரஷ்யா தயாரிக்கும் SU-35 மற்றும் SU-57 யுத்த விமானங்களை கொள்வனவு செய்யக்கூடும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு துருக்கி ரஷ்ய யுத்த விமானங்களை கொள்வனவு செய்யின், துருக்கிக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் முரண்பாடுகள் மேலும் உக்கிரம் அடையும்.
.
2017 ஆம் ஆண்டு துருக்கி ரஷ்யாவிடம் இருந்து புதிய வகை S-400 என்ற விமான எதிர்ப்பு ஏவுகணைகளை கொள்வனவு செய்ய உடன்பட்டு இருந்தது. அந்த கொள்வனவால் சினம் கொண்ட அமெரிக்கா தனது தலைமையில் தயாரிக்கும் புதிய F-35 வகை யுத்த விமானங்களை துருக்கிக்கு விற்பனை செய்வதை தடை செய்தது.
.
அந்த நிலையிலேயே துருக்கி யுத்த விமானங்களையும் ரஷ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்ய முனைகிறது.
.
2016 ஆம் ஆண்டு துருக்கியின் தற்போதைய ஜனாதிபதியை இராணுவ கவிழ்ப்பு மூலம் விரட்ட முனைந்த குழுவுக்கு அமெரிக்கா உதவி உள்ளது என்று துருக்கியின் தற்போதை ஜனாதிபதி Recep Tayyip Erdogan  கூறியுள்ளார்.
.
அமெரிக்கா, ரஷ்யா, துருக்கி, ஈரான், சிரியா ஆகிய நாடுகள் சிக்கலான உறவுகளை கொண்டுள்ளன.

.