mRNA COVID மருந்துக்கு ஹாங் காங் செல்லும் சீனர்

mRNA COVID மருந்துக்கு ஹாங் காங் செல்லும் சீனர்

ஐந்து தினங்களுக்கு முன்னர் சீனாவுக்கும், ஹாங் காங்க்கும் இடையிலான எல்லை மீண்டும் திறந்து விடப்பட்டது. COVID காரணமாக கடந்த 3 சுமார் ஆண்டுகளாக இந்த எல்லை மூடப்பட்டு இருந்தது.

எல்லை திறந்த பின் சீனர் பெருமளவில் ஹாங் காங் படையெடுக்கின்றனர். இதற்கு காரணம் mRNA பயன்பாடு மூலம் தயாரிக்கப்பட்ட COVID மருந்தை பெறவே. முதல் தொகுதி சீனர் இன்று வியாழன் ஹாங் காங் வந்துள்ளனர்.

இவர்கள் சுமார் $241 செலுத்தியே Pfizer-BioNTech மருந்தை ஹாங் காங்கில் பெறுகின்றனர்.

சீனாவில் mRNA மருந்து கிடையாது. பதிலாக சீன நிறுவனங்கள் தயாரித்த மருந்துகளே கிடைக்கும். சீன மருந்துகள் mRNA மூலம் தயாரிக்கப்பட்வை அல்ல. சீனாவின் தற்போதைய மருந்துகள் Polio மருந்துகளைப்போல் Inactivated வைரஸ் முறையில் தயாரிக்கப்படுபவை.

mRNA மருந்துகள் DNA மாற்றங்கள் மூலம் தயாரிக்கப்படுபவை. இவை நீண்ட காலத்தில் மனிதருக்கு தீமை செய்யுமா என்பது தற்போது தெரியாவிடினும், கரோனா பரவலை இவை நன்கு தடுக்கின்றன.

CanSinoBio என்ற சீன நிறுவனம் mRNA வகை கரோனா மருந்து தயாரிப்பில் ஈடுபட்டாலும் அது பாவனைக்கு வர மேலும் சிலகாலம் செல்லும்.