Moderna என்ற மருத்துவ நிறுவனம் தாம் தயாரித்த கரோனா தடுப்பு மருந்து அதன் 3 ஆம் கட்ட பரிசோதனையில் 94.5% அளவில் கரோனா எதிர்ப்பு சக்தியை உருவாக்கி உள்ளதாக கூறுகிறது. சில தினங்களுக்கு முன்னர் Pfizer தனது கரோனா தடுப்பு மருந்து 90% அளவிலான கரோனா எதிர்ப்பு சக்தியை உருவாக்கியதாக கூறி இருந்தது.
Moderna தயாரிக்கும் மருந்து – 20 Celsius (minus 20 C) வெப்பநிலையில் வைத்திருக்கப்படக்கூடியது. அதனால் இது பல வறிய நாடுகளுக்கு இலகுவில் வழங்கப்படக்கூடியது. Pfizer தயாரிக்கும் மருந்து – 80 C வெப்பநிலையில் வைத்திருக்கப்படவேண்டுயது.
Moderna 3 ஆம் கட்ட பரிசோதனைக்கு தனது மருந்தை 30,000 அமெரிக்கருக்கு வழங்கி இருந்தது. அதில் பல்லின மக்களும் உள்ளடக்கப்பட்டு இருந்தனர்.
அமெரிக்கா 50% அல்லது அதற்கும் அதிகமான வல்லமை கொண்ட கரோனா தடுப்பு மருந்துகளை அங்கீகாரம் செய்ய தீர்மானித்து இருந்த நிலையில் 90% மற்றும் 94.5% அளவு வெற்றிகமான மருந்துகள் மிகவும் சாதகமாக உள்ளன. அதனால் இவற்றுக்கு விரைவில் அங்கீகாரம் கிடைக்கும்.
Moderna உடனடியாக 20 மில்லியன் மருந்துகளை தயாரிக்க உள்ளதாகவும், அடுத்த ஆண்டு முடிவுக்குள் 1 பில்லியன் மருந்துகளை தயாரிக்க உள்ளதாகவும் கூறியுள்ளது.
மேற்படி மருந்துகளால் தோற்றுவிக்கப்படும் கரோனா எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது இதுவரை அறியப்படவில்லை. ஆண்டுகள் பல சென்ற பின்னரே அது அறியப்படும்.