Microsoft களவாக Windows 10 திணிப்பு

Windows10

இந்த வருட நடுப்பகுதியில் இருந்து Microsoft தனது புதிய Windows 10 OSஐ (Operating System) சிலருக்கு இலவசமாக வழங்க முன்வந்திருந்தது. Windows 7 மற்றும் Windows 8.1 போன்ற OS மூலம் இயங்கும் கணனிகளை கொண்டோர் Windows 10 OSஐ இலவசமாக download செய்யலாம் என்று கூறப்பட்டு இருந்தது. பெரும்பாலானோர் அவ்வாறு Windows 10ஐ download செய்தும் இருந்தனர்.
.
ஆனால் Windows 7ஐ பாவிக்கும் வேறுபலர், அதன் தரம் காரணமாக, Windows 10ஐ download செய்ய விரும்பவில்லை. அவர்கள் Windows 10 download செய்ய தேவையான எந்தவொரு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டும் இருக்கவில்லை. அப்படி இருந்தும் இவர்களின் கணணிகளுள்ளும் Microsoft களவாக Windows 10 file களை download செய்து வருகிறது. இவ்வாறு களவாக download செய்யப்படும் file களின் அளவு (size) 3 GB (gigabyte/கிகாபைட்) முதல் 6 GB வரை இருக்கும்.
.
இவ்வாறு download செய்யப்பட்ட file களை பின்வரும் முறையில் அழித்து விடலாம். Start ஐ click செய்து பின் cleanup என்று search செய்யும் இடத்தில் type செய்தால் Disk cleanup என்ற link தெரியும். அதை click செய்யும்போது அது ஒரு புதிய windowவை கொடுக்கும். அதில் C: drive ஐ தெரிவு செய்து பின் OK செய்தால் cleanup தொடரும்.
.
பின்வரும் window வரும்போது இங்கு காணப்படும் வரிகளை check செய்து பின் OK ஐ click செய்ய வேண்டும். இவ்வாறு செய்வது தேவை அல்லாத file கள் எல்லாவற்றையும் அழித்து விடும்.
.
Windows10Clean
.

மீண்டும் இவ்வாறு களவாக Windows 10 fileகள் download செய்யப்படாமல் இருக்க Windows download முறைமையை பின்வருமாறு கட்டுப்படுத்தலாம்.

.

Windows10Update
.