சுமார் 40 வருடங்களின் முன், 1975 ஆம் ஆண்டில், Microsoft ஐ கூட்டாக உருவாக்கியவர்கள் Bill Gates என்பவரும் Paul Allen என்பவரும் ஆகும். Bill Gates இதன் நீண்ட கால CEO ஆக பதவி வகித்து வந்திருந்தார். 2000 ஆம் ஆண்டு முதல் Steve Ballmer இதன் CEO ஆனார். இதன் மூன்றாவது CEO ஆக Satya Nadella 2014-02-04 முதல் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் Bill Gates, Satya Nadella வுக்கு உதவியாளராக பணிபுரியவுள்ளார்.
Satya Nadella இந்தியாவின் ஹைதராபாத்தில் பிறந்தவர். பின்னர் அமெரிக்கா சென்ற இவர் தனது MS படிப்பை Wisconsin இலும், MBA படிப்பை சிக்காக்கோவிலும் பெற்றிருந்தார். இவர் 1992 ஆம் ஆண்டு முதல் Microsoft இல் பணியாற்றி வந்துள்ளார். 2013 ஆம் ஆண்டில் இவரின் அடிப்படை ஊதியம் சுமார் $6.7 மில்லியன்.
Bill Gates தொடர்ந்தும் Satya Nadella வின் உதவியாளர் ஆக இருக்கப்போவதால் Bill Gates இன் ஆளுமை மீண்டும் Microsoft உள் தொடர்ந்தும் இருக்கும் என கருதப்படுகிறது. அதனால் Satya Nadella வின் சுதந்திரம் சற்று கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கலாம்.