அமெரிக்காவின் Florida மாநிலத்தில் உள்ள Miami சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் பொதிகளை பரிசோதனை செய்யும் TSA (Transportation Security Administration) ஊழியர்கள் இருவர் பயணிகளின் கை பைகளில் இருந்து பணம் திருடுவது CCTV விடீயோக்களில் பதிவாகி உள்ளன.
இந்த இரண்டு ஊழியர்களும் தற்போது பதவி விலக்கப்பட்டு, அவர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டு உள்ளது.