Maoist தாக்குதலுக்கு 15 இந்திய போலீசார் பலி

Odisha

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதன் இடதுசாரிகளான Maoist குழுவின் குண்டுக்கு பொலிஸாரின் வாகனம் இலக்காகியதில் 15 போலீசாரும் 1 பொதுமகனும் பலியாகி உள்ளனர். இன்னோர் போலீஸ் நிலையத்துக்கு மேலதிக பாதுகாப்பை வழங்க சென்ற போலீஸ் குழு ஒன்றே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியது.
.
1960 ஆம் ஆண்டுகளில் உக்கிரமாக சண்டையில் ஈடுபட்டு இருந்த Maoist அல்லது நக்சலைட் பின்னர் சிலகாலம் தமது தாக்குதல்களை குறைத்து இருந்தனர். ஆனால் அவர்களின் தாக்குதல்கள் மீண்டும் அண்மைக்காலங்களில் அதிகரித்து வருகிறது. 2010 ஆம் ஆண்டின் பின் இவர்கள் சுமார் 2,100 பேரை கொலை செய்துள்ளனர். 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் Maoist 25 இந்திய போலீசாரை கொலை செய்திருந்தனர்.
.
சட்டப்படி அங்கீகாரம் கொண்ட Communist Party of India என்ற கட்சியும் Maoist அமைப்புக்கு அரசியல் ஆதரவை வாழங்கி வருகிறது. அண்மை காலங்களில் இந்த கட்சி பல அரசியல் வெற்றிகளையும் அடைந்து வருகிறது.
.
Maoist சுமார் 11 இந்திய மாநிலங்களில் பரவி இருந்தாலும் சில மாநிலங்களில் அதிக ஆதிக்கத்துடன் உள்ளனர். மஹாராஷ்டிரா, ஒடிசா, சஹஸ்திகார் ஆகிய மாநிலங்களில் இவர்களின் தாக்குதல்கள் உக்கிரம்.
.