இந்தியாவை விட்டு தப்பியோடி பிரித்தானியாவில் வாழும் இந்திய வர்த்தகர் Vijay Mallyaவின் இந்திய கடவுச்சீட்டை இந்தியா இரத்து செய்துள்ளது. இவர் இந்திய வங்கிகளில் சுமார் $1.3 பில்லியன் கடன் பெற்று பின் அவற்றை திருப்பி செலுத்தாது தப்பி ஓடியுள்ளார். இவர் தற்போது பிரித்தானியாவில் உள்ள சுமார் $15 மில்லியன் பெறுமதியான மாளிகையில் வாழ்கிறார்.
.
.
Kingfisher விமானசேவை நட்டத்தில் மூழ்கிய இவரின் மிகப்பெரிய நிறுவனம். அத்துடன் மதுபான நிறுவனம், Formula 1 காரோட்ட குழு என வேறு பல நிறுவனங்களும் இவருக்கு இந்தியாவில் இருந்தன. Kingfisher 2015 ஆம் ஆண்டில் சேவையை ஆரம்பித்து இருந்தது. அனால் குளறுபடிகள் காரணமாக இந்திய அரசு Kingfisher நிறுவனத்தின் பறப்பதற்கான உரிமையை 2012 ஆண்டில் இரத்து செய்திருந்தது. அப்போது விமானிகளுக்கும், பணியாளர்களுக்கும் பல மாதங்கள் ஊதியங்கள் வழங்கப்படாமல் இருந்திருந்தது.
.
.
1955 ஆம் ஆண்டு பிறந்த இவர் முதலில் அகில பாரதீய ஜனதா தல் கட்சியில் இருந்தார். பின்னர் சுப்ரமணிய சுவாமியின் ஜனதா கட்சியில் இணைந்தார். 2002 இல் காங்கிரசின் உதவியுடன் தேர்தல் ஒன்றில் வெற்றி பெற்ற இவர் பின் 2010 இல் BJP யின் உதவியுடன் மீண்டும் வெற்றி பெற்றிருந்தார்..
.