Malaysian Airlines விமானம் ஒன்று Ukraine-Russia எல்லைப்பகுதில் வீழ்ந்துள்ளது. Amsterdam இல் இருந்து கோலாலம்பூர் சென்றுகொண்டிருந்த இந்த விமானம் 280 பயணிகளையும் 15 பணியாளர்களையும் கொண்டிருந்தது என கூறப்பட்டுள்ளது.
.
.
தற்போது யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கிழக்கு Ukraine பகுதிக்கு மேலே 10,000 மீட்டர் உயரத்தில் (33,000 அடி) செல்கையிலேயே ஏவுகணை ஒன்றால் வீழ்த்தப்படு இருக்கலாம் என நம்பப்படுகிறது.
.
.
ஆனால் அப்பகுதியில் இயங்கும் ரஷ்சிய ஆதரவு குழு தமது ஏவுகணை 4,000 மீட்டர் உயரம் வரையே சென்று தாக்கும் வல்லமை கொண்டன என்கின்றது.
.
.
சுமார் 4 மாதங்கள் முன் வேறு ஓர் பெய்ஜிங் நோக்கி சென்ற Malaysian Airlines விமானம் தொலைந்தும் இருந்தது. இன்றுவரை அந்த விமானம் கண்டுபிடிக்கப்படவில்லை.
.
1983 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல் ஒன்றுக்கு கொரியாவின் பயணிகள் விமானம் உள்ளாகி 269 உயிர்கள் பலியாகி இருந்தன.
.
.
1988 ஆம் ஆண்டில் அமெரிக்க கடல்படை ஈரான் நாட்டின் பயணிகள் விமானம் ஒன்றை ஏவுகணை கொண்டு தாக்கியதில் 290 உயிர்கள் பலியாகி இருந்தன.