இன்று இடம்பெற்ற தேர்தலில் இம்மானுவேல் மகிறோன் (Emmanuel Macron) மீண்டும் சனாதிபதியாக தெரிவு செய்யப்படுகிறார்.
இம்முறை இவர் சுமார் 58% வாக்குகளை பெறுகிறார். 2017ம் ஆண்டு இவர் 66% வாக்குகளை பெற்று இருந்தார். இவர் தனது ஆதரவை பெருமளவில் இழந்து இருந்தாலும் இறுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
ஏனைய ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் மகிறோன் வெற்றியால் நிம்மதி அடைந்துள்ளனர்.
இவருக்கு எதிராக போட்டியிட்ட National Rally (NR) கட்சியின் Le Pen சுமார் 42% வாக்குகளை பெறுகிறார். National Rally கட்சி அகதிகள் எதிர்ப்பு, இஸ்லாமிய எதிர்ப்பு போன்ற கொள்கைகளை கொண்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் கொள்கையையும் NR கொண்டிருந்தாலும் இறுதி நேரத்தில் அந்த கொள்கையை கைவிட்டு இருந்தது. ஆனாலும் அவர்களால் வெல்ல முடியவில்லை.