Smartphone தொலைபேசி உலகில் தனக்கென இடம் ஒன்றை கொண்டிருந்த தென்கொரியாவின் LG நிறுவனம் தனது smartphone தயாரிப்பை நிறுத்தவுள்ளது. முற்கால உலக சந்தையில் LG smartphone 3ம் இடத்தை வகித்து இருந்தது. அனால் தற்காலத்தில் அது 11ம் இடத்தில் உள்ளது.
அமெரிக்காவில் LG கடந்த ஆண்டு 23 மில்லியன் தொலைபேசிகளை விற்று 13% சந்தையை கொண்டிருந்தாலும், உலக அளவில் அது 2% சந்தையையே கொண்டுள்ளது. அமெரிக்காவில் iPhone 39% சந்தையையும், Samsung 30% (256 மில்லியன் தொலைபேசிகள்) சந்தையையும் கொண்டுள்ளன.
LG தரமான பொருட்களை தயாரித்தாலும் iPhone, Samsung போன்ற கவர்ச்சிகரமான தொலைபேசிகளுடன் போட்டியிட முடியாது தவித்தது. அத்துடன் புதிதாக தோன்றிய சீன தயாரிப்புகளான Huawei, Xiaomi (உலக சந்தையின் 11%), OnePlus (உலக சந்தையின் 8%) தொலைபேசிகளும் LG வாடிக்கையாளரை தம்வசம் இழுத்தன.
கடந்த 6 ஆண்டுகளில் LG தொலைபேசி தயாரிப்பு வர்த்தகம் சுமார் $4.5 பில்லியன் பணத்தை இழந்துள்ளது.
2020ம் ஆண்டு LG தயாரித்த LG Wing தொலைபேசியே அதன் இறுதி தொலைபேசியாக இருக்கும். LG நிறுவனத்தின் தொலைபேசி வர்த்தகம் ஜூலை 31ம் திகதியுடன் முடிவடையும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் சிலகாலம் தனது பழைய தொலைபேசிகளை LG தொடர்ந்தும் விற்பனை செய்யும்.
அதேவேளை முன்னர் அழிந்துபோன Blackberry நிறுவனத்தின் Android தொலைபேசி தயாரிப்பை சிறிய அமெரிக்க நிறுவனமான OnwardMobility உரிமை பெற்று மீண்டும் தயாரிக்கவுள்ளது.