Laser ஆயுதங்கள் அமெரிக்கா போன்ற முன்னணி இராணுவங்களுக்கு கிடைத்த நவீன ஆயுதங்கள். இந்த ஆயுதங்களின் தரம், பயன்பாடு என்பன முற்றாக அறிப்படவில்லை. இப்போதும் இவை பரீட்சாத்த நிலையிலேயே உள்ளன.
அவ்வாறு இருக்கையில் தனது Laser ஆயுதங்களை வளைகுடா அனுப்புகிறது அமெரிக்க இராணுவம். இந்த ஆயுதம் USS Ponce என்ற தாக்குதல் கப்பலில் நிலைகொண்டிருக்கும்.
அதிக சக்தி கொண்ட Laser கதிர்களை செலுத்துவதன் மூலம் இந்த ஆயுதங்கள் ஏவுகணைகளில் உள்ள இலத்திரனியல் பாகங்களை செயல் இழக்க செய்யலாம், அத்துடன் ஏவுகனைகள் மற்றும் விமானக்களில் துளைகளை ஏற்படுத்தி அவற்றை செயலிழக்கவும் செய்யலாம்.
2000 ஆம் ஆண்டில் USS Cole என்ற அமெரிக்க கப்பலை Yemen இல் வைத்து தாக்கியது போல் வளைகுடாவிலும் தாக்கலாம் என்ற அச்சத்தாலேயே இவ் ஆயுதம் அங்கு அனுப்பப்படுகிறது.