அமெரிக்காவின் Las Vagas என்ற சூதாட்ட நகரில் உள்ள Trump Hotel க்கு முன்னாள் Tesla EV truck ஒன்றை வெடிக்க வைத்த Matthew Alan Livelsberger, வயது 37, என்பவரும் ஒரு அமெரிக்க இராணுவத்தினன் என்று அறியப்பட்டுள்ளது.
இவர் பட்டாசுகளை கொண்டு செய்த தயாரித்த தரம் குறைந்த குண்டு வெடித்த பின் இவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார். அவ்விடத்தில் நின்ற சிலர் சிறு காயங்களுக்கு ஆளானாலும் வேறு எவரும் பலியாகவில்லை.
Matthew Livelaberger அமெரிக்காவின் விசேட பயிற்சி பெற்ற Green Beret என்ற இராணுவ அணியின் உறுப்பினன் என்று அறியப்பட்டுள்ளது. இவர் தற்போதும் சேவையில் உள்ளார். தாக்குதல் நேரத்தில் இவர் விடுமுறையில் இருந்துள்ளார்.
Colorado மாநிலத்தில் உள்ள Denver நகரில் Tesla EV truck வாகனத்தை வாடகைக்கு பெற்ற இவர் New Mexico மாநிலத்துக்கும், Arizona மாநிலத்துக்கும் பயணித்து உள்ளார். பின்னரே இவர் Las Vegas சென்றுள்ளார் குண்டை வெடிக்க வைத்துள்ளார்.
இவரும், New Orleans நகரத்தில் 14 பேரை வாகனத்தால் அடித்து கொலை செய்தவரும் ஒரே காலத்தில் Texas மாநிலத்தில் உள்ள அமெரிக்காவின் Fort Bragg இராணுவ தளத்தில் பணியாற்றி உள்ளனர். அனால் இவர்களுக்கு இடையே தொடர்பு எதுவும் இருந்தமை இதுவரை அறியப்படவில்லை.
அதேவேளை Livelsberger தனது மனைவியுடன் முரண்பட்டு இருந்துள்ளமையும் போலீசாரால் அறியப்பட்டுள்ளது.