துருக்கி, சிரியா, ஈராக், ஈரான் ஆகிய நாடுகள் சந்திக்கும் பகுதியில் உள்ள Kurdish ஆயுத குழுக்களை அமெரிக்கா நீண்ட காலமாக ஆயுத, பொருளாதார, அரசியல் உதவிகள் வழங்கி வளர்த்து வந்துள்ளது.
.
அண்மையில் ISIS குழு மீது அமெரிக்கா தாக்குதல் செய்தபோதும் சிரியாவில் உள்ள Kurdish ஆயுத குழுவான Syrian Democrtic Forces (SDF) உடன் இணைந்து செயல்பட்டு இருந்தது.
.
நேற்று துருக்கி-சிரியா எல்லையில் உள்ள SDF மீது தாக்குதல் செய்யவுள்ளதாக துருக்கி அறிவித்தது. அந்த செய்தியின் பின் ரம்பின் கட்டளைக்கு அமைய அமெரிக்கா தனது படைகளை அப்பகுதியில் இருந்து திடீரென பின்வாங்கியது.
.
ரம்பின் இந்த செயலை SDF தனது முதுகில் குத்தியது போன்றது என்று விபரித்து உள்ளது. பல அமெரிக்கர்களும் ரம்பின் நகர்வு அறிவு கெட்டது என்று கூறியுள்ளனர். ரம்பின் Republican கட்சி உறுப்பினர்களும் ரம்பை சாடி உள்ளனர்.
.
தற்போது ரம்ப் துருக்கியின் படைகள் SDF ஐ தாக்கினால் பதிலுக்கு தான் துருக்கியின் பொருளாதாரத்தை உடைத்தெறிவேன் என்று மிரட்டி உள்ளார்.
.
ரம்பின் தெளிவில்லாத கொள்கைகளால் அமெரிக்கர் குழம்பி உள்ளனர்.
.